கமுதியில் அமைக்கப்பட்டு வரும் அதானி கிரீன் எனர்ஜி சூரிய சக்தி மின் நிலையத்தை கவுதம் அதானி தனது மனைவியுடன் நேற்று பார்வையிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கமுதி-சாயல்குடி சாலையில் செங்கப்படை, செந்தனேந்தல், தாதாகுளம், குண்டுகுளம், சொக்கலிங்கபுரம், ஒழுகுபுளி, புதுக்கோட்டை, தோப்படைப்பட்டி, ஊ.கரிசல்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் அதானி கிரீன் எனர்ஜி என்கிற பெயரில் 2,500 ஏக்கர் பரப்பில், ஒரே இடத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின் நிலையத்தை அதானி குழுமம் அமைத்துள்ளது.
இத்திட்டம் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ஒரே இடத்தில் 648 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் அதானி குழுமம் இத்திட்டத்துக்கு ரூ.4550 கோடி செலவிட்டுள்ளது.
இந்த மின் நிலையத்தில் 2.5 லட்சம் மில்லியன் சூரிய சக்தி மின் தகடுகள் (சோலார் மாடுல்கள்) அமைக்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள், கருவிகளை இத்திட்டத்தில் பயன்படுத்த உள் ளன. இங்கு உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தை தமிழக மின்வாரியத்துக்கு அதானி குழுமம் வழங்கி வருகிறது. இத்திட்டம் மூலம் தற்போது தமிழகத்தில் 8,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இத்நிலையத்தை அதானி குழுமத்தைச் சேர்ந்த கவுதம் அதானி தனது மனைவியுடன் நேற்று பார்வையிட்டார். தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கமுதி மின் உற்பத்தி நிலையத்துக்கு வந்தார். அங்கு ஹெலிகாப் டர் மூலம் மின் நிலையத்தை சுற்றிப் பார்த்த அவர் காலை 9.40 மணிக்கு தரை இறங்கினார்.
அதையடுத்து 30 அடி உயரத்தில் 1 கி.மீ. சுற்றளவை பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, பார்வை யாளர் மாடம் மற்றும் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் காரில் மின் நிலையத்தை சுற்றிப்பார்த்தார். அதையடுத்து மனைவியுடன் மின் திட்ட பகுதி யில் மரக்கன்றுகள் நட்டார். காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு மீண் டும் 11.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றார்.
கவுதம் அதானி ஆய்வின் போது மின்திட்ட பொறுப்பாளர்கள் மல்லு, சஞ்சய் பெரால் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.