சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி | கோப்புப்படம் 
தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பொறுப்பேற்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி இன்று (செப்.13) பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த பிப்ரவரி மாதம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 32-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.

SCROLL FOR NEXT