எழும்பூர் அரசு அருங்காட்சி யகத்தில் பழமையான கட்டிடங் கள், திரையரங்கம் மற்றும் காட்சியமைப்பு பணிகள் ஆகியவை ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் நாட்டில் உள்ள 2-வது பெரிய அருங்காட்சியகம் ஆகும். இங்கு அரியவகை பொருட்கள் 3 தொன்மையான கட்டிடங்களிலும் (Heritage Buildings), 3 பாரம்பரியம் அல் லாத கட்டிடங்களிலும் (Non-Herit age Buildings) காட்சிப்படுத்தப்பட் டுள்ளன. இந்தக் கட்டிடங்கள், அருங்காட்சிய திரையரங்கம் உள்ளிட்டவை சீரமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அருங்காட்சிய கங்கள் துறை இயக்குநர் டி.ஜகந் நாதன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
எழும்பூர் அரசு அருங் காட்சியகத்தில் 1851-ம் ஆண்டு முதல் காட்சிப் பொருட் கள் தொடர்ந்து சேகரிக்கப் பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
படிமங்கள், நாணயங்கள், கற்சிலைகள், மானிடவியல் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கலைப் பொருட்கள் பண்டைய கலாச்சாரத்தை அறிய உதவும் சான்றாதாரமாக உள்ளன.
காலசுழற்சியில் அற்றுப் போன, அருகி வரும் பல்வேறு வகையான தாவர, விலங்கின மாதிரிகளும் பதப்படுத்தப்பட்டு வருங்கால சமுதாயத்தினர் அறியும் வகையில் காட்சிப்படுத் தப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தில் சுமார் ஒரு லட்சம் சதுரஅடியில் அமைந்துள்ள 54 காட்சிக் கூடங் கள் அதன் பழமை மாறாமல் சீரமைக்கப்பட உள்ளன. அதே போல 500 பேர் அமரக்கூடிய அருங்காட்சியக திரையரங்கம் குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ளது. அருங்காட்சியக வளாகத்தில் காட்சியமைப்பு பணிகளும் மேற்கொள்ளப் படும். பார்வையாளர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.
இப்பணிகள் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப் படும்.
சென்னை அரசு அருங் காட்சியகம், 20 மாவட்ட அருங் காட்சியகங்களில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் தானியங்கி தீத்தடுப்பு ஒலிப் பான்கள் மற்றும் பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன என்றார்.