தமிழகம்

வரிசையில் நின்று ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றிய திருமாவளவன்

செய்திப்பிரிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அசோக் நகரில் உள்ள ஆந்திரா வங்கியில் வரிசையில் நின்று செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றினார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அவற்றை வங்கி யில் கொடுத்து மாற்றி வரு கின்றனர். இதனால் வங்கிகள், ஏடிஎம்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை அசோக் நகரில் உள்ள ஆந்திரா வங்கி கிளையில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றினார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் கூறிய திருமாவளவன், ‘‘கடந்த 2 நாட்களாக செலவுக்கு பணமில்லாமல் அவதிப்பட்டேன். எனவே, எங்கள் கட்சிக்கு கணக்கு உள்ள அசோக் நகர் ஆந்திரா வங்கிக்குச் சென்று செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ரூ. 4 ஆயிரத்து 500 பெற்றுக்கொண்டேன். மை வராததால் எனக்கு மை வைக்கவில்லை. போதுமான பணம் கிடைக்காததால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பியதைப் பார்க்க முடிந்தது.

கடந்த ஒரு வாரமாக மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT