தமிழகம்

செப்.15-ல் அண்ணா பிறந்தநாள்: அதிமுக மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்கள் தூவி, மரியாதை செலுத்துகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, வரும் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்துகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT