எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை வாழ்க்கையை பிரதிபலிக்கும் வித மாக பொதிகை தொலைக்காட்சி யில் சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ‘குறையொன்று மில்லை’ என்ற நிகழ்ச்சி ஒளி பரப்பாகி வருகிறது. 59-வது அத்தியாயமாக ஒளிபரப்பாகும் இன்றைய நிகழ்ச்சியில் மகா வைத்யநாத சிவன் இயற்றிய 72 மேள ராகமாளிகா சக்கரம் தொகுப்பு இடம்பெறும்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இந்த தொகுப்பு ‘எல்.பி’ ஒலிப்பதிவாக அவர் இசை உலகுக்கு அளித்த விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர, பல்துறைக் கலைஞர்களின் பங்களிப்போடு அபூர்வமான புகைப்படங்களும் வழக்கம்போல் இடம்பெறும்.
அதோடு, ரமண மகரிஷியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் 1996-ம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத்த பாடல் ஒன்றும் இடம்பெறும். இதன் மறு ஒளிபரப்பு செவ்வாய்க் கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.