தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 549 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக மொத்தம் ரூ. 91.48 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியுமான அனில் ஆர்.தவே உத்தரவுப்படி நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை லோக் அதா லத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்படுகிறது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மாநில சட்டப்பணி கள் ஆணைக்குழு செயல் தலை வரும், உயர் நீதிமன்ற நீதிபதி யுமான ஹூலுவாடி ஜி.ரமேஷ் ஆகியோரின் மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் நேற்று லோக் அதாலத் நடத்தப்பட்டது.
இதில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், தொலைபேசி, வாகன விபத்து இழப்பீடு, சொத்து வரி, திருமணப் பிரச்சினை, தொழிலாளர் நலன், வங்கி, பொதுமக்கள் பயன்பாடு தொடர் புடைய நிலுவை வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் பட்டியலிடப்பட்டு மொத்தம் 255 அமர்வுகளில் நீதிபதிகள் இந்த வழக்குகளை விசாரித்தனர். இதில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 549 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப் பீடாக மொத்தம் ரூ.91 கோடியே 48 லட்சத்து 29 ஆயிரத்து 570 வழங்க உத்தரவிடப்பட்டது.
லோக் அதாலத்துக்கான ஏற் பாடுகளை மாநில சட்டப்பணி கள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்எம்டி டீக்காராமன் தலைமையில் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான சட்டப்பணி கள் ஆணைக்குழுவினரும், நீதித்துறை ஊழியர்களும் செய்திருந்தனர்.