தமிழகம்

வெடி விபத்துகள் நிகழாமல் தடுக்க தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையில் பணித்திறனாய்வு கூட்டம்

செய்திப்பிரிவு

வெடி விபத்துகள் இனி நிகழாமல் தடுக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலை மையில் அதிகாரிகளின் பணித்திற னாய்வுக் கூட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட இடங்களில் சமீப காலமாக பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகளை கையாளும்போது விபத்துகள் நிகழ்ந்தன. இது போன்ற விபத்துகள் இனி நிகழா மல் தடுக்க எடுக்க வேண்டிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளின் பணித்திறனாய்வுக் கூட்டம் நடை பெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமை தாங்கினார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செய லாளர் பெ.அமுதா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் பி.போஸ் பங்கேற்றனர்.

அப்போது சட்ட விதிமீறல் இருந் தால் பட்டாசு தொழிற்சாலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறி வுறுத்தப்பட்டது. தற்போது பட்டாசு களை பாதுகாப்பாக உற்பத்தி செய்ய 3 சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கான பயிற்சி மைய மேற்பார்வையாளர்கள், ஃபோர்மேன்கள் மற்றும் தொழி லாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் துறை தொடர்பான இதர முக்கிய பணிகள் குறித்து திறனாய்வு செய்யுமாறு தொழி லாளர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT