சென்னையில் தீபாவளி நெரிசலைக் குறைக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. வரும் 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் செங் குன்றம் வழியாக ஆந்திர மாநிலத் துக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் அண்ணாநகர் மேற்கில் இருந்து இயக்கப்படும். கிழக்கு கடற் கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகளும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்து களும் கோயம்பேடு பேருந்து நிலை யம் எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் திண்டிவனம், விக்கிர வாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது.
பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத் தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப் படும். கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் ஊரப்பாக்கத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் தூய்மைப் பணிகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக போக்குவரத் துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அண்ணாநகர் (மேற்கு), பூந்தமல்லி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையங்களில் குடிநீர், இருக்கை, மேற்கூரை அமைத்தல், பயோ-கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இதற்கான பணிகளை ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளோம்’’ என்றனர்.