தமிழகம்

சென்னை–குருவாயூர் எக்ஸ்பிரஸில் 5 மாதமாக உணவகம் இல்லாத நிலை: பயணிகள் கடும் அவதி

செய்திப்பிரிவு

சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 5 மாதங்களாக உணவகம் (பான்ட்ரி கார்) இல்லாததால் ரயில் பயணிகள் பெரிதும் சிரமப் படுகின்றனர்.

சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும் ரயில் நிலையங்களில் ஓடிப்போய் உணவு வாங்கி வர வேண்டிய அவலம் உள்ளது. சிலர் ரயிலை விட்டுவிட்டு அவதிப்படவும் செய் கிறார்கள். தனியார் விற்கும் உணவுப் பண்டங்கள் சாப்பிட லாயக்கற்றதாக இருக்கிறது என் கின்றனர் பயணிகள்.

ரயில் பயணிகளுக்கான அடிப் படை வசதிகளில் பான்ட்ரி – கார் (ஓடும் ரயில் உணவகம்) முக்கியமானது. பகல்நேர எக்ஸ்பிரஸ் மற்றும் நீண்டதூர ரயில்களில் உள்ள பான்ட்ரி கார் வசதி, பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கிறது. பல்லவன், வைகை, குருவாயூர், கோவை, பிருந்தாவன், தமிழ்நாடு, ஜி.டி. எக்ஸ்பிரஸ், துரந்தோ, ராஜதானி, சதாப்தி போன்ற நீண்டதூர எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் பான்ட்ரி கார் வசதி உள்ளது.

பான்ட்ரி –காரில் இருந்து சுடச்சுட சூப், இட்லி, தோசை, வடை, வெஜிடபிள் பிரியாணி, முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி, நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. பயணிகளும் இருந்த இடத்திலே இவற்றை வாங்கிச் சாப்பிட முடிகிறது.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் கடந்த 5 மாதங்களாக பான்ட்ரி – கார் வசதி இல்லை. அதனால், டிபன், சாப்பாடு வாங்க ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கி ஓடிப்போய் வாங்கி வர வேண்டியுள்ளது. ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நிற்கும் என்பதால் பயந்து, பயந்து உணவுப் பண்டங் களை வாங்குவதாக பயணிகள் ஆதங்கப்படுகின்றனர். இதனால் பதட்டத் துடன், மன உளைச்சலும் ஏற்படுகிறது என்கிறார்கள்.

இதுகுறித்து சாத்தூர் தொழில் வர்த்தக சங்கப் பொதுச் செய லாளரும், மதுரை கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான பி.டி.கே.ஏ. பாலசுப்பிரமணியன்

“தி இந்து” நிருபரிடம் கூறும்போது, “குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 மாதங்களுக்கு முன்பே பான்ட்ரி கார் வசதி இல்லை. இதுகுறித்து பலதடவை ரயில்வே நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த மதுரை கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத் தில் இதுகுறித்து கேள்வி எழுப் பப்பட்டது. அதற்கு, பான்ட்ரி கார் நடத்தியவரின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. புதிய ஒப்பந்தம் முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரி கள் தெரிவித்தனர்” என்றார்.

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஓடும் ரயிலில் பான்ட்ரி கார் அமைந்துள்ள பெட்டியில் சமையலுக்கு கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துகின்றனர். கியாஸ் சிலிண்டரில் தீ விபத்து அபாயம் அதிக என்ப தால், அதற்குப் பதிலாக எலக்ட்ரிக் அடுப்பு பொருத்தப்பட்ட புதிய வகை பான்ட்ரி கார் பெட்டி தயாரிக்கும் திட்டம் உள்ளது. அதனால்தான் பயணிகள் பாதுகாப்பு கருதி நீண்டதூரம் செல்லும் ரயில்களில் தற்போதுள்ள பான்ட்ரி கார் பெட்டி நீக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் ரயிலில் பயணிகளிடம் ஆர்டர் எடுத்து செல்போன் மூலம் முக்கியமான ரயில் நிலையங்களில் உள்ள செல் கிச்சனுக்கு தெரிவிக்கின்றனர். பெரிய ரயில் நிலையத்தில் உணவு எடுத்து வந்து விநியோகிக் கப்படுகிறது. எனவே, பான்ட்ரி கார் எடுக்கப்பட்டதால் பயணிகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT