முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டி பாஜகவினர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவர் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை யில் கடந்த 22-ம் தேதி நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெய லலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற் கிடையே, முதல்வரின் உடல்நலம் பற்றி விசாரிக்க தினமும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத் துவமனைக்கு வந்த வண்ணம் உள் ளனர். நேற்று முன்தினம் காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்து, அப்போலோ டாக்டர்களை சந்தித்து முதல்வரின் உடல்நலம் பற்றி விசாரித்துச் சென்றார்.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களை சந்தித்து முதல்வரின் உடல்நலம் பற்றி விசாரித்து விட்டுச் சென்றனர்.
மருத்துவமனைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், நிருபர் களிடம் கூறும்போது, ‘‘டாக்டர் களை சந்தித்து முதல்வருக்கு அளிக் கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட் டறிந்தேன். முதல்வரின் உடல்நிலை யிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் குணமடைந்துவிடுவார். துணிச்சலான முதல்வரான ஜெய லலிதா பல சவால்களில் வெற்றி கண்டவர். இதில் இருந்தும் மீண்டு வருவார். முதல்வர் உடல்நிலை விரைவாக குணமடைய பாஜக வினர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவர். முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகவும் அக்கறை யுடன் உள்ளார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரி வித்தது பற்றி கருத்து கூற விரும்பவில்லை’’ என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன்:
முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். முதல்வர் விரைவில் பூரண குணமடைய வேண்டும். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது, துணை முதல்வரை நியமிப்பது பற்றி அதிமுக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுபற்றி நான் எதுவும் கூற முடியாது.
டாக்டர் கிருஷ்ணசாமி:
முதல்வ ரின் உடல்நலம் பற்றி அமைச்சர் களை சந்தித்து கேட்டறிந்தேன். மருத்துவ சிகிச்சையால் முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். முதல்வர் விரைவில் பூரண குணமடைய வேண்டும்.