தமிழகம்

மதுக்கடைகளுக்கு எதிராக விரைவில் புது இயக்கம்: அன்புமணி தகவல்

செய்திப்பிரிவு

மதுக்கடைகளுக்கு எதிரான புது இயக்கத்தை விரைவில் மருத்துவர் ராமதாஸ் துவங்க உள்ளார் என தருமபுரியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பயணத்தின்போது அன்புமணி தெரிவித்தார்.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று செட்டிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பாமக சார்பில் விரைவில் மதுக்கடைகளை எதிர்த்து போராடும் இயக்கம் ஒன்று துவங்கப்பட உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராடும் நோக்கத்துடன் இந்த புது இயக்கத்தை விரைவில் துவங்க உள்ளார்.

மதுக்கடைகள் அழிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் பங்குபெறவும், அதன் செயல்பாடுகளில் கலந்துகொண்டு போராடவும் முன்வர வேண்டும். இதுபோன்ற ஒற்றுமையான செயல்பாட்டின் மூலம் தான் குடும்ப பொருளாதாரத்தை சீரழிக்கும் மதுவை அழிக்க முடியும்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

SCROLL FOR NEXT