பெண் வழக்கறிஞர் வீடு தாக்கப் பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா எம்பியின் ஆதரவாளரான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஹரி நேற்று நெல்லை யில் கைது செய்யப்பட்டார்.
சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திரு நெல்வேலி மாவட்டம் திசையன் விளை அருகே உள்ள ஆணை குடியைச் சேர்ந்த பணிப்பெண்கள் இருவர் பாலியல் புகார் அளித்த னர். இந்த வழக்கில் பணிப் பெண்களுக்கு ஆதரவாக திசையன் விளையைச் சேர்ந்த பெண் வழக் கறிஞர் ஒருவர் ஆஜராகி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு பெண் வழக்கறிஞரின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கினர். மேலும், அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிலர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் புகார் அளித்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்பியின் ஆதரவாளரான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரியை போலீஸார் நேற்று அதிகாலை திருநெல்வேலியில் கைது செய்தனர். பெண் வழக்கறிஞரின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் ஹரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டுள் ளதைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது