தமிழகம்

முதல்வருக்கு மாற்று யார்? - விரைந்து நியமிக்க சீமான் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் தமிழகத்தை நிர்வகிக்க அவருக்கு மாற்று தற்போது யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி பிரச்சினைக்காக கடந்த மாதம் சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியின்போது, அதில் பங்கேற்ற திருவாரூர் மாவட் டம் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந் தார். இந்நிலையில், மன்னார்குடி யில் உள்ள விக்னேஷின் வீட்டுக்கு நேற்று தனது மனைவி கயல்விழியுடன் வந்த சீமான், விக்னேஷின் குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸும், பாஜக வும் கர்நாடகாவுக்கு சாதமாகவே நடந்துகொள்கின்றன. அதனுடைய வெளிப்பாடுதான், 2007-ம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டதில் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மாற்றுக் கருத்தை வெளியிடாத மத்திய அரசு, தற்போது இரு மாநிலங்களும் பேசித் தீர்க்கலாம் என்ற கருத்தை வெளியிடுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவாக உள்ள நிலையை காரணமாக முன் வைத்து, காவிரி பிரச்சினையி்ல் தமிழகத்துக்கு எதிரான நடவடிக் கையில் மத்திய அரசு வேகமாக இறங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று பணிக்கு திரும்பும் வரை, தமிழகத்துக்கு முதல்வர் இடத்தில் இருந்து பணியாற்ற ஒரு பிரதிநிதி அவசியம் தேவைப்படுகிறார். அப் போதுதான், தமிழகத்தின் கோரிக் கையை முன்வைக்க முடியும். எனவே, அந்த பிரதிநிதியை அடை யாளம் காட்ட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT