தமிழகம்

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்குப் பாடுபடுவோர் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பாடுபடுவோருக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tn.gov.in/ta/forms/deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அக்டோபர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT