மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ் ணன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நடைபெறவுள்ள 3 சட்டப்பேர வைத் தொகுதி தேர்தலில் ஏற்கெனவே நடந்தது போன்ற தவறுகள் நடக்காமல், தேர்தல் அதிகாரிகள் அதிக கவனம் எடுத்து செயல்படவேண்டும். மீண்டும் மீண்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானமாகிவிடும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், மீண்டும் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் தயங்கக் கூடாது.
பாஜக ஆட்சி காலத்துக்குள் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட திமுகவுக்கு தார்மிக உரிமை இல்லை என்றார்.