சாத்தனூர் அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக நேற்று தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர். 
தமிழகம்

தி.மலை உட்பட 4 மாவட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 17,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் அதிகபட்சமாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று காலை திறந்து விடப்பட் டது. இதன் அளவு, பிற் பகலில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறப்பு மற்றும் மழையின் தாக் கத்தால் தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு வரும் 17,600 கனஅடி தண் ணீரும் 11 மதகுகள் வழியாக தென்பெண்ணையாற்றில் வெளி யேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர் மட்டம் 116.45 அடியாக உள்ளது. அணை யில் 6,755 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 12.4 மி.மீ., மழை பெய் துள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணா மலை மற்றும் திருக்கோவிலூர் வட்டாட்சியர்களுக்கு நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் அறிவழகன் நேற்று அவசர கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “கிருஷ்ணகிரி அணையில் இருந்து 7-ம் தேதி (நேற்று) காலை 8 மணி அளவில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கொளமஞ்சனூர், திருவடத் தனூர், புதூர் செக்கடி, எடத்தனூர், ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, ஒலகலபாடி, எம்.புதூர், கீழ் ராவந்தவாடி, தொண்டமனூர், மலமஞ்சனூர், அலப்பனூர், வாழ வச்சனூர் மற்றும் சதாக்குப்பம் கிராமங்கள் வழியாக செல்லும் தென் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித் துள்ளார். மேலும், தி.மலை, கள்ளக் குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தென்பெண்ணையாறு கரையோரங் களில் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் குளிக்கக் கூடாது, ஆறு மற்றும் கரையோரத்தில் நின்று செல்பி எடுக்கக் கூடாது, கரையோரங்களில் கால்நடை களை பராமரிக்கக் கூடாது, ஆற்றில் துணி துவைக்கக் கூடாது என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

நீர் இருப்பு குறைப்பு: ஜவ்வாதுமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 55.11 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 720 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 599 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 3.3 மி.மீ., மழை பெய்துள்ளது.

22.97 அடி உயரம் உள்ள மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 19.52 அடியாக குறைக் கப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 115 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணை யில் 68 மில்லியன் கனஅடி தண் ணீர் உள்ளது. அணை பகுதியில் 76 மி.மீ., மழை பெய்துள்ளது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் வருகிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 180 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 21.6 மி.மீ., மழை பெய் துள்ளது.

ஆரணியில் 47.2 மி.மீ., மழை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை உள்ளிட்ட பகுதி களில் நேற்று மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஆரணியில் 47.2 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஜமுனாமரத்தூரில் (ஜவ் வாதுமலை) 37, செங்கத்தில் 10.4, வெம்பாக்கத்தில் 12, செய்யாறில் 2 மி.மீ., மழை பெய்துள்ளது.

SCROLL FOR NEXT