தமிழகம்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?- கோவையில் 5 இளைஞர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோவையில் 5 இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ள 21 பேர் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறி, கேரளாவைச் சேர்ந்த 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர்.

அதில், கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த அபு பஷீர் (எ) ரஷீத்(26) என்பவரும் ஒருவர். இவரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் மேலும் சிலருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில்

அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமையினர் கோவை ஜி.எம்.நகர் பகுதியில் 5 வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்தின்பேரில் 4 இளைஞர் களை பிடித்து, மாநகரக் காவல் ஆணையரகத்தில் வைத்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மேலும் ஒருவரை பிடித்து 5 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: அபு பஷீர் அளித்த தகவலின் அடிப்படையில்தான், 5 பேரிடம் விசாரணை நடைபெறு கிறது. தேசிய புலனாய்வு முகமை யைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கோவையில் முகா மிட்டு விசாரித்து வருகின்றனர்.

மடிக்கணினி, கடவுச்சீட்டு, முகநூல் மற்றும் அலைபேசி தொடர்புகள், விசாரணையில் உள்ளவர்களின் நண்பர்கள் உட்பட பல்வேறு விவரங்கள் குறித்து விசாரிக்கின்றனர். ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் 5 பேரிடமும் விசாரிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே, அவர்களை கைது செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு போலீஸார் கூறினர்.

SCROLL FOR NEXT