புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவமனைக்கு வரும் நோயாளி களுக்காக முன்னாள் மாணவர்கள் வழங்கிய இலவச பேட்டரி காரை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரி | நோயாளிகள் வசதிக்காக முன்னாள் மாணவர்கள் அளித்த ரூ.5.25 லட்சம் பேட்டரி கார்

செய்திப்பிரிவு

நோயாளிகள் வசதிக்காக பல் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அளித்த ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள பேட்டரி கார் சேவையை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் ரூ.5.25 லட்சம் மதிப்பில் 6 பேர் பயணிக்கும் பேட்டரி காரை இலவசமாக வழங்கியுள்ளனர்.

இந்த காரில் பல் மருத்துவக் கல்லூரிக்கு வரும் நோயாளிகளில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் பல் மருத்துவமனை வளாகத்திற்குள் பயணிக்கலாம். இந்த சேவையை முதல்வர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

அரசு கொறடா ஆறுமுகம், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், நலவழித்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் கென்னடிபாபு விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

SCROLL FOR NEXT