காவிரியில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உறுதியளித்ததாக தமிழக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்,
காவிரி பிரச்சினையால் தமிழகத்தில் எழுந்துள்ள நிலை குறித்து விளக்குவதற்காக தமிழக பாஜக ஐவர் குழுவி னர் நேற்று முன்தினம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்த னர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதா கிருஷ்ணன், தேசிய செயலா ளர் எச்.ராஜா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றி ருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க முடியாது என தெரிவித்ததால் தமிழகத்தில் எழுந்துள்ள நிலை குறித்து அமித்ஷாவிடம் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகிய வற்றை அமைக்காவிட்டால் தமிழகத்தில் பாஜக பின்னடை வைச் சந்திக்கும் என அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை. தற்போதைய சூழலில் உடனடியாக அமைக்க முடியாது என்றுதான் தெரிவித்துள்ளது. ஆனால், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றன.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப் பின்படி காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்க வேண்டும் என்பதை அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம். காவிரியில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்ற சுப்பிர மணியன் சுவாமி கடிதம் பற்றி தெரிவித்தோம். அது சுவாமியின் தனிப்பட்ட கருத்து. அது பாஜகவின் கருத்து அல்ல என அமித்ஷா தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது பற்றியும், காவல்துறை நட வடிக்கை எடுக்காதது பற்றி யும் தெரிவித்தோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதி அளித்தார்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.