தமிழகம்

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணி: 10 மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - மதுரையில் 30-ம் தேதி நடக்கிறது

செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் பணிகள் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி மதுரையில் ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

திருப்பரங்குன்றம் சட்டப்பேர வைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் நவ.19-ல் நடக்க உள்ளது. அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் மருத்துவர் பி.சர வணன் ஆகியோர் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவில் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர் வடக்கு, தெற்கு, மதுரை புறநகர் வடக்கு, தெற்கு, திண்டுக் கல் கிழக்கு, தேனி, விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்ட திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட கட்சித் தலைமை உத்தர விட்டுள்ளது.

இந்நிலையில், தொகுதி தேர்தல் பணி குறித்த செயல்வீரர்கள் கூட்டம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 30-ம் தேதி மதுரையில் நடக்க உள்ளது. இதில் 10 தென் மாவட்ட திமுக செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 25-ம் தேதி காலை 10 மணிக்கு திருநகர் முதல் பேருந்து நிறுத்தத்தில் உள்ள எம்ஆர்எப் மகாலில் நடக்க உள்ளது. இதில் கட்சியினர் தவறாது பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT