தமிழகம்

குறைந்த அளவு தொண்டர்கள் வந்ததால் விஜயகாந்த் கடும் அதிருப்தி

செய்திப்பிரிவு

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஜயகாந்தின் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் குறைந்தளவு தொண்டர்களே பங்கேற்றதால் விஜயகாந்த் அதிருப்தியடைந்தார். இதில் கருத்துகளைக் கேட் காமல், புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியாக அமைந்ததால் தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.

மக்களவை தேர்தலில் தேமுதிக ஓர் இடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு 40 நாட்களுக்குப் பிறகு மாவட்டம் வாரியாக தொண்டர்களை விஜய காந்த் சந்திக்கும் ‘உங்களுடன் நான்’ கோவை, திருப்பூர் மாவட் டங்களைத் தொடர்ந்து 3-வது நாளாக கரூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூர்- மதுரை புறவழிச் சாலையிலிருந்த தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காலை 11 மணிக்கு மேல் விஜயகாந்த் வந்தார்.

அரங்கத்தில் பேசிய அவர், ‘தேர்தல் தோல்வி குறித்து வருந்த வேண்டாம். இன்னும் நிறையத் தேர்தல்களை சந்திப்போம். பத்திரி கைகளில் அப்படி இப்படி வரும் செய்திகளை நம்ப வேண்டாம். உங்களுடன் நான் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்பதற்காகவே உங்களைச் சந்திக்க வந்திருக் கிறேன்’ என்றார்.

அதன்பிறகு உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வரிசை எண் கொடுத்து புகைப்படம் எடுக்க உள்ளே அனுமதித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகை யாளர்கள், புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மிகவும் குறைந்த அளவு தொண்டர்களே வந்ததால் சில மணி நேரங்களில் புகைப்படம் எடுக்கும் பணி முடிவடைந்தது. குறைந்த அளவு தொண்டர்களே வந்ததால் அதிருப்தியடைந்த விஜயகாந்த் 3 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே கரூரில் இருந்துவிட்டு, மதிய உணவுக்கு நாமக்கல் புறப் பட்டுச் சென்றுவிட்டார்.

தேர்தல் தோல்விக்கான காரணம்குறித்து தொண்டர்களின் கருத்துகளைக் கேட்காமல் வெறும் புகைப்படம் மட்டுமே எடுத்ததால் தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.

‘உங்களுடன் நான்’ வெறும் புகைப்படம் எடுக்கும் வைபவ மாகவே கரூரில் நடந்து முடிந்தது.

SCROLL FOR NEXT