காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 175 கிலோ மீட்டர் தூரம் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
திருவாரூரில் அவர், செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து அனைத் துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் அக்.17, 18-ம் தேதிகளில் ரயில் மறியல் போராட் டம் நடைபெறுகிறது. கர்நாடக அரசின் அடவாடித்தனத்தால் 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு சம்பாவுக்கும் நெருக் கடி ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறையின் அறிவுரையை கேட்டு நேரடி விதைப்பில் டெல்டா விவ சாயிகள் ஈடுபட்டனர். கடைமடை வரை தண்ணீர் பெயரளவில் வந்து சேர்ந்தாலும், வயல்களுக்கு பாயவில்லை. இதனால், 18 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடகா மதிக்க வில்லை. அதேபோல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவ கவுடா மேற்கொண்ட உண்ணா விரதத்தின்போது, மத்திய அமைச் சர்கள் நேரில் சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உறுதியளித்ததை பிரதமர் கண்டிக்கவில்லை.
கடந்த 1948 முதல் 2014 வரை தாமோதர் பள்ளத்தாக்கு ஆணை யம், துங்கபத்ரா வாரியம், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம், நர்மதா கட்டுப்பாட்டுக் குழு ஆணை யம், கிருஷ்ணா கோதாவரி நதி நீர் ஆணையம் உட்பட பல்வேறு வாரியங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என கூறுவதன் மூலம், மத்திய அரசு தனது வஞ்சகம் நிறைந்த துரோகத்தை வெளிக் காட்டியுள்ளது.
இதைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் 175 கிலோ மீட்டர் தூரம் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் ரயில் பயணத் தைத் தவிர்த்து, போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
நல்லகண்ணு வேண்டுகோள்
விருதுநகர் மாவட்டம், கிருஷ் ணன்கோவிலில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய நிர் வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்ல கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரி யத்தை அமைப்பது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. கர்நாடகாவில் நடைபெற வுள்ள தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக் கிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினைகளைத் தீர்க்க நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக் கப்பட்டு சுமுகமாக செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினை யில் மட்டும் மத்திய அரசு நாடாளு மன்றத்தை கூட்டப் போவதாகக் கூறுவது ஜனநாயகம் இல்லை. இது தவறான முன்னுதாரணம். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் குரல் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்றார்.