தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தலைமையில் மருத்துவ அதிகாரிகள் குரோம் பேட்டை மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
குரோம்பேட்டை மருத்துவ மனையில் காய்ச்சல் தடுப்பு பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:
சென்னை புறநகர் பகுதிகளில் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது 5 ஆண், 5 பெண் மற்றும் 1 குழந்தை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பொழிச்ச லூர், அனகாபுத்தூர், பம்மல், அய்யப்பன்தாங்கல், குன்றத்தூர், மதுரவாயல் பகுதிகளில் 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் தடுப்புப் பணிகள் நடந்துவருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தீவிர சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும். காய்ச்சல் பற்றிய மருத்துவ உதவிக்கு 104 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பொழிச்சலூரில் 2 குழந்தைகள் இறப்புக்கான வைரஸ் குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் காய்ச்சல் கட்டுப்பாட் டுக்குள் உள்ளது. அதிக பாதிப்பு கள் உள்ள பகுதிகளாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்டங் களில் தீவிர சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி, கடலூர் மாவட்டங்களில் பெரு மளவு காய்ச்சல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்றார்.