தமிழகம்

மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்களில் நிலவும் தீண்டாமை: மாநாட்டில் தகவல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட 4-வது மாநாடு நடைபெற்றது. தலைமைக் குழு உறுப்பினர்கள் ஆஞ்சி, சசிகலா, பாலகிருஷ்ணன் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ரமேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலக் குழு உறுப்பினர் செ.முத்துராணி வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன் தொடக்கி வைத்தார். மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன், மாநகராட்சி உறுப்பினர் வெ.பு.இன்குலாப், சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குநர் எஸ். செல்வகோமதி ஆகியோர் பேசினர்.

இம்மாநாட்டில், தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளில் 12-க்கு மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடை பணியின்போது விஷவாயு தாக்கி 22 பேர் மரணமடைந்துள்ளனர். பாதாள சாக்கடை பணியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. பாலமுருகன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT