தமிழகம்

செல்போன், லேப்-டாப்புக்கு ரயிலில் காப்பீடு வழங்க ஐஆர்சிடிசி திட்டம்

செய்திப்பிரிவு

ரயில் பயணத்தின்போது பயணி களின் செல்போன், லேப்டாப் திருடு போனால் அதற்குரிய இழப்பீட்டை பெறுவதற்காக காப்பீட்டு திட் டத்தை அறிமுகப்படுத்த ஐஆர்சிடிசி தீர்மானித்துள்ளது.

ரயில் பயணத்தின்போது விபத்து ஏற்பட்டால் பயணிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை வழங்குவதற் காக ரயில்வே நிர்வாகம் 92 பைசா பிரீமியம் செலுத்தக்கூடிய வகையில் ரூ.10 லட்சத்துக்கான பயணக் காப்பீட்டு திட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேர் சேர்ந்துள்ளனர்.

இத்திட்டத்துக்கு கிடைத்த வர வேற்பையடுத்து அடுத்தக் கட்ட மாக ரயில் பயணத்தின் போது பயணிகளின் செல்போன், லேப் டாப் திருடு போனால் அதற்குரிய இழப்பீட்டை பெறுவதற்கான காப் பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த ஐஆர்சிடிசி தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் பயணத்தின் போது பயணி களின் செல்போன், லேப்டாப் திருடு போனால் அதற்குரிய இழப்பீட்டை பெறுவதற்காக காப்பீட்டு திட் டத்தை அறிமுகப்படுத்த ஐஆர்சிடிசி தீர்மானித்துள்ளது. இதற்காக இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதற்கட்டமாக கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அல்லது அரசு ஊழியர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்தலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து விரைவில் முறை யான அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT