தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 2.50 லட்சம் பேர் மனுத்தாக்கல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 146 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 150 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2 ஆயிரத்து 275 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 ஆயிரத்து 522 பேரும், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 887 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 90 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 948 பேரும் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 18 பேர் நேற்று மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

இதுவரை மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,807 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 9,407 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 40,872 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 79,204 பேரும், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,912 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,479 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,671 பேரும் மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 352 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT