பழநி அருகே கன மழையில் சாலை சேதமடைந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழநியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது.
ஆறுகளை ஒட்டியுள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப் பணித் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பழநி அருகேயுள்ள சாத்தன் ஓடையின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வ ழியாக கரிகாரன்புதுார், ராசாபுரம், ஒட்டணை புதுார் உள்ளிட்ட 5- க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சென்று வருகின்றனர். இப்பகுதியில் தற் காலிகமாக ஓடையையொட்டி சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சாத்தன் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக் கப்பட்டது. நடந்து செல்வோர் ஆபத்தான முறையில் ஓடையை கடந்து செல்கின்றனர். இருசக்கர வாகனம், காரில் செல்வோர் பல கி.மீ. துாரம் சுற்றி செல்லும் நிலையால் சிரமத்துக்கு ஆளாகி யுள்ளனர்.