தமிழகத்தில் ‘டென்டல் டூரிஸம்' அமைக்கும் திட்டம் உள்ளது என கொடைக்கானலில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
கொடைக்கானலில் நடைபெற்ற இந்திய பல் மருத்துவச் சங்க தமிழ்நாடு கிளையின் மாநில மாநாட்டில் முன்னாள் மாநிலத் தலைவர் ராஜசிகாமணி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் உமா சங்கர், மாநிலச் செயலாளர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டைத் தொடங்கிவைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்ததாவது: சென்னையில் ‘டென்டல் ஸ்பா' அமைக்கப்பட்டுள்ளது. பல்மருத்துவமனை தொடங்ககடன் வசதி, டென்டல் டூரிஸம், மெடிக்கல் டூரிஸம் அமைக்கும் திட்டம் உள்ளது என்றார்.
தொடர்ந்து, பல் மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சி புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.
தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.