தமிழகம்

தாது மணல் தொடர்புடைய வழக்கு சென்னைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

தாது மணல் முறைகேடு தொடர் பாக விசாரணை நடத்தி ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங்பேடி அளித்த அறிக்கையை வெளியிடவும், முறைகேட்டில் தொடர்புடையவர் கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறி ஞர் எஸ்.சுரேஷ்குமார், உயர் நீதி மன்ற கிளையில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதுபோன்ற ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என பதிவுத்துறைக்கு அமர்வு உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT