அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற பாமாயில் ஆலை அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றவர்கள். 
தமிழகம்

அருணாச்சல பிரதேசத்தில் பாமாயில் ஆலை: பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் சார்பில் அடிக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: பதஞ்சலி ஃபுட்ஸ் (பழைய பெயர் ருச்சி சோயா) நிறுவனம் சார்பில் அருணாச்சல பிரதேசம் மாநிலம், கிழக்கு சையங் மாவட்டம், நிக்லோக் பகுதியில் பாமாயில் (பனை எண்ணெய்) ஆலை அமைக்க அடிக்கல் நாட்டும் விழா கடந்த ஆக.31-ம் தேதி நடைபெற்றது.

பதஞ்சலி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா, அருணாச்சல பிரதேச விவசாயத் துறை அமைச்சர் தகே தகி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 9 மாவட்டங்களில் தற்போது பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் சார்பில் 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு எண்ணெய் பனை பயிர்களை நட திட்டமிடப்பட்டுள்ளது. பாமாயில் தொழில் மாநிலத்தின் வருவாயைப் கணிசமான அளவுக்கு பெருக்கவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் உதவும்.

உணவு எண்ணெய் உற்பத்தியில் நாடு தன்னிறைவை அடைய வேண்டும், குறிப்பாக பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி செய்யவேண்டும்; இதில் 3.2 ஹெக்டேர்சாகுபடி வடகிழக்கு மாநிலங்களில்இருக்க வேண்டும் என்ற அரசின்முயற்சிக்கு பதஞ்சலி உறுதுணையாக இருக்கிறது.

ஆண்டுக்கு சராசரியாக 7.5 லட்சம் மெட்ரிக் டன் பனை எண்ணெய்யை உற்பத்தி செய்தால், இதன்மூலம் ரூ.10,500 கோடி அன்னியச் செலாவணியை அரசால் சேமிக்க முடியும். மேலும் 5.8 லட்சம் பேர் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.

நாட்டின் முன்னணி பாமாயில் நிறுவனங்களுள் ஒன்றான பதஞ்சலி ஃபுட்ஸ் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 55 மாவட்டங்களில் 43 ஆயிரம் விவசாயிகள் மூலம், 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி செய்து வருகிறது ஆந்திராவில் ஏற்கெனவே 2 நவீன பாமாயில் ஆலைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பதஞ்சலி ஃபுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT