தமிழகம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்தஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் பி. வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என வும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT