ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்க தமிழக - கேரள அதிகாரிகள் இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தில், தமிழக- கேரள மாநிலங்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் சோலையாறு அணையில் இருந்து 12.30 டிஎம்சி தண்ணீரும், ஆழியாறு அணையில் இருந்து 7.25 டிஎம்சியும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆழியாறு அணையில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி 700 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கேரள நீர்வளத் துறை அதி காரிகள் வலியுறுத்தினர். ஆனால் ஆழியாறு அணையில் நீர் குறை வாக உள்ளதால் 100 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முடியும் என தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அணையில் தற்போது உள்ள நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீரை பகிர்ந்து கொள்ள, தமிழக- கேரள அதிகாரி கள் இடையே நேற்று முன்தினம் பொள்ளாச்சி பிஏபி திட்ட அலுவல கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கேரள மாநில நீர்பாசனத் துறை இணை இயக்கு நர் சுதிர் மற்றும் தமிழகத்தின் சார்பில் பிஏபி திட்ட கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோவன் தலை மையில் பொறியாளர்கள் பங்கேற் றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:
அக்டோபர் 10-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு, ஆழியாறு அணை யில் இருந்து விநாடிக்கு 540 கன அடி திறந்துவிட கேரள தரப்பில் கேட்கப்பட்டது. தற்போது அணை யில் நீர்மட்டம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி, இரு மாநில பாசனத் தேவைகளும் பாதிக்காத வகையில் தினசரி விநாடிக்கு 200 கன அடி திறக்க முடியும் என தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அணையில் நீர் இருப்பு குறைவு, மழைப்பொழிவு இல்லாமை ஆகியவற்றை புரிந்து கொண்ட கேரள நீர்ப்பாசன அதி காரிகளும் இதற்கு ஒப்புக் கொண்டதால் நீர் பங்கீடு குறித்து சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டது. நீர் பங்கீடு குறித்த அடுத்த ஆலோசனைக் கூட்டம், இம்மாதம் பாலக்காட்டில் நடை பெறும் என்றார்.