பாப்பிரெட்டிப்பட்டியில் போலீஸாரின் தடையை மீறி பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் இப்ராஹிம் தலைமையில் விநாயகா் சிலை ஊா்வலம் நடந்தது. 
தமிழகம்

பாப்பிரெட்டிப்பட்டியில் தடையை மீறி விநாயகா் சிலையுடன் பாஜகவினர் ஊா்வலம்; போலீஸாருடன் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

பாப்பிரெட்டிப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் பாஜகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று விநாயகா் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இதில் பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

சிலையுடன் ஊர்வலமாக நடந்து செல்ல போலீஸார் அனுமதி மறுத்தனர். இதற்கு இப்ராஹிம் மற்றும் கட்சியினர் எதிா்ப்பு தொிவித்தனர். இதனால் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் பாஜகவினர் ஊர்வலமாகச் சென்று வாணியாறு அணையில் விசர்ஜனம் செய்தனர்.

இது குறித்து செய்தியாளர் களிடம் இப்ராஹிம் கூறியதாவது;

இந்து- இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக நடைபெறும் விநாயகர் ஊர்வலத்திற்கு போலீஸார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அடக்கு முறையை கையாளுகின்றனா். ஊர்வலத்தை தடுத்து நிறுத்த நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இந்து-இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இது போன்ற விழாக்களை தடுத்தால் அவர்களுக்காக பாஜக மக்களோடு இருந்து போராடும்.

திமுக, இந்துக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக செயல்படுகிறது. 2024-க்கு பிறகு தமிழகத்தில் தாமரை மலரும். அப்போது, காவல்துறைக்கு அனைத்து உரிமைகளையும் தருவோம், என்றார்.

நிகழ்வின்போது, காவல் ஆய்வாளர்கள் பாப்பிரெட்டிப்பட்டி லதா, அரூர் பாஸ்கர் பாபு தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா்.

SCROLL FOR NEXT