தமிழகம்

ரயில்வே தேர்வுக்கு அனுமதிக்கப்படாதவர்களுக்கு ஜூலை 13-ல் சிறப்பு தேர்வு

செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடந்தது. ஆன்லைனில் விண்ணப்பித்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான விவரங்கள் தாமதமாக கிடைக்கப் பெற்றதால் சில விண்ணப்பதாரர்கள் இந்த எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப் படவில்லை.

இந்த நிலையில், அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 13-ம் தேதி சென்னையில் மட்டும் சிறப்பு எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியான நபர்களுக்கு ஹால்டிக்கெட் அவர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்ப நிலவரத்தை சென்னை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத் தில் (www.rrbchennai.gov.in) தங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம்.

தகுதியிருந்தும் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் அழைப்புக்கடிதத்தில் பெயர், கல்வித்தகுதி உள்ளிட்டவற் றில் தவறுகள் இருந்தால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் ஜூலை 12-ம் தேதி சென்னையில் உள்ள ரயில்வே தேர்வு வாரியத்தில் டூப்ளிகேட் ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு நடைபெறும் நாளன்று எந்த விண்ணப்பதாரருக்கும் டூப்ளிகேட் ஹால்டிக் கெட் வழங்கப்பட மாட்டாது.

SCROLL FOR NEXT