தமிழகம்

கோவை | ஏடிஎம்-மில் தானாக வந்த பணத்தை ஒப்படைத்த ஓட்டுநர்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறையைச் சேர்ந்த ஓட்டுநர் அரவிந்த் (26), தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை புலியகுளத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது நான்கு 500 ரூபாய் நோட்டுகள் தானாக ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்துள்ளன. இதையடுத்து, தொடர்புடைய வங்கி தலைமையகத்தை தொடர்புகொண்டு அரவிந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள், கோவை ரயில்நிலையம் அருகேஉள்ள எஸ்பிஐ அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நேற்று அங்கு சென்ற அரவிந்த், எஸ்பிஐ துணை மேலாளரிடம் ரூ.2 ஆயிரத்தை ஒப்படைத்தார். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு வங்கி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT