தமிழகம்

கண்காணிப்பு கேமரா உதவியால் மோட்டார் பைக் திருடர்கள் 2 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு

கண்காணிப்பு கேமராவின் உத வியால் மோட்டார் சைக்கிள் திரு டர்கள் 2 பேர் கைது செய்யப்பட் டனர். அவர்களிடம் இருந்து 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை அசோக்நகர், கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் 3 மாதங் களில் சுமார் 30 பேர் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தி.நகர் காவல் துணை ஆணையர் சரவணன் உத்தரவின்பேரில் அசோக்நகர் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் திருடு போன பகுதிகளில் வைக்கப்பட் டிருந்த கண்காணிப்பு கேமராக் களை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்கள் மோட்டார் சைக்கிளை போலி சாவி மூலம் திருடிச் செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது. அதே நபர்கள் வேறு சில இடங்களிலும் மோட்டார் சைக்கிள் களை திருடி செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. அதில் இருவரின் உரு வங்களும் தெளிவாக தெரிந்தன. அதை வைத்து இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக இறங்கினர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் கே.கே.நகர் பகு தியில் சாலையில் விட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டதாக கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு ஒருவர் செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே தனிப்படை போலீஸார் அந்த பகுதி முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரிக்க, அவர்கள்தான் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்களை திரு டிவந்தனர் என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து இருவ ரையும் கே.கே.நகர் காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி னர். அதில் அவர்கள் புதுப் பேட்டை பகுதியை சேர்ந்த சிக் கந்தர், திருநின்றவூர் பெரியார் நகரை சேர்ந்த சமீர் பாஷா என்பது தெரிந்தது. இருவரும் உறவினர்கள். போலி சாவி மூலம் மோட்டார் சைக்கிள்களை திருடி, அதன் உதிரி பாகங்களை விற்று அவர்கள் பணம் சம்பாதித்தது விசாரணையில் தெரிந்தது. இரு வரிடம் இருந்தும் 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

SCROLL FOR NEXT