முதல்வராக இருந்தபோது மற்ற மத நிகழ்ச்சிகளில் பங் கேற்ற கருணாநிதி, தசரா விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப் பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தி யாவின் பிரதமர் நரேந்திர மோடி, தசரா விழாவில் பங்கேற்று ‘ஜெய் ராம்’ என எப்படி முழக்கமிடலாம் என்று திமுக தலைவர் கரு ணாநிதி கேள்வி எழுப்பியுள் ளார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது மற்ற மதத்தினர் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கடவுள் நம்பிக்கையற்றவர் எனக் கூறிக் கொள்ளும் அவரே, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, மத நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டதில் என்ன தவறு? இது எப்படி மத உணர்வை தூண்டுவதாக அமையும்?
பிரதமராக இருந்தபோதும், இப்போதும் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடை பெறும் தசரா விழாவில் மன்மோகன் சிங் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்துகொள்கிறார். மன் மோகன் சிங், தான் பின்பற்றும் வழிபாட்டுத் தலத்துக்குச் சென்று வழிபாடு நடத்தினார். இவற்றையெல்லாம் விமர்சிக் காத கருணாநிதி, மோடியை மட்டும் விமர்சிப்பது உள்நோக் கம் கொண்டது.
கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற மற்ற மத பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்பவர் கருணா நிதி. ஆனால், முதல்வராக இருந்தபோதுகூட தீபா வளிக்கு அவர் வாழ்த்து சொன்னதில்லை. கருணாநிதி மதச்சார்பற்ற தலைவரா அல்லது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவரா என்ற கேள்வியை இப்போது சாதா ரண மக்களும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலையில் பாஜக இல்லை. உத்தரப்பிர தேசத்தில் பாஜக வெற்றி பெறும் என கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடி யாதவர்கள் இதுபோல மத வாத குற்றச்சாட்டை கூறிவரு கிறார்கள். வழக்கம்போல இதை மக்கள் புறம்தள்ளுவார் கள். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.