தமிழகம்

அக்டோபர் மாதத்தில் கோயில்களில் இலவச திருமண ஏற்பாடுகள்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அறநிலையத் துறைஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்கு ஏதுவாககோயில்களில் திருமணம் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 25 ஏழை, எளியஇணைகளைத் தேர்வு செய்துகோயில்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவின்படி அக்டோபர் மாதத்தில் திருமணங்களை நடத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும், இணை ஆணையர் மண்டலம், கோயில் பெயர், மணமக்களின் பெயர் மற்றும் முகவரி, திருமணம் நடைபெறும் நாள், திருமணம் நடத்தப்பட உள்ள இடம் ஆகிய விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பவும் மண்டல இணை ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT