தென்னிந்திய லாரி உரிமையாளர் சம்மேளனத்துக்கு ஆதரவாக, தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு சரக்கு புக்கிங் செய்வது காலவரையின்றி நிறுத்தப்படும் என தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சம்மேளன மாநிலத் தலைவர் ராஜவடிவேலு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்க புதிய நிர்வாகி கள் தேர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற ராஜ வடிவேலு கூறியதாவது:
காவிரி பிரச்சினையின்போது கர்நாடகாவில் தீ வைத்து எரிக்கப் பட்ட தமிழக லாரிகளுக்கு அம் மாநில அரசு நஷ்டஈடு வழங்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் வரும் 5-ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்கு வதில்லை என்று காலவரையற்ற போராட்டத்தை லாரி உரிமையா ளர்கள் சம்மேளனம் அறிவித்துள் ளது. இந்த போராட்டத்துக்கு லாரி புக்கிங் ஏஜென்ட்களும் ஆதரவு தெரிவித்துள்ளோம்.
காவிரி பிரச்சினை காரணமாக, கடந்த 25 நாட்களாக தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கும், கர் நாடகா வழியாக பிற மாநிலங் களுக்கும் லாரிகள் இயக்கப்பட வில்லை. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.500 கோடி அளவுக்கு சரக்குகள் புக்கிங் செய்யப்படும்.
கடந்த 25 நாட்களாக கர்நாட காவுக்கு சரக்கு புக்கிங் நிறுத்தப் பட்டுள்ளதால், ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சரக்குகள் தேக்கமடைந் துள்ளன. இந்நிலையில், தற்போது, லாரி உரிமையாளர் சம்மேளனத் துக்கு ஆதரவாக, கர்நாடகாவுக்கு சரக்கு புக்கிங் செய்வதை காலவரையின்றி நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
லாரிகள் வேலைநிறுத்தம்
“தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்காவிட் டால் அக். 5-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி நாமக்கல்லில் நேற்று தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தால் தமிழகத்தில் மட்டும் சுமார் 4.20 லட்சம் லாரிகள், ட்ரெய்லர்கள், காஸ் டேங்கர் லாரிகள், மினி லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோக் கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 25 நாட்களாக கர்நாடகாவுக்கு சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால், ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.