தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் வாகன சோதனை: வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் சட்டப்பேர வைத் தொகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இரும்பு வியாபாரி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

திருப்பரங்குன்றம் சட்டப்பேர வைத் தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து தொகுதி எல்லைகளை போலீஸார் சீல் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 18 பறக்கும் படைகள், 10 நிலைக் குழுவினர், வீடியோ கண்காணிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தொகுதியில் பல இடங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநகர் முதல் பேருந்து நிறுத்தத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி யன் தலைமையிலான நிலைக் குழுவினர் நேற்று அதிகாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வாடகை கார் ஒன்றில் வந்த மதுரை வடக்காவணி மூலவீதி வித்வான் பொன்னுசாமி தெருவைச் சேர்ந்த இரும்பு வியாபாரியிடம் ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சம் இருந்தது. இப்பணம் குறித்து அவர் சரியான விளக்கம் தராததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பணத்துக்கான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச் செல்லும்படி இரும்பு வியாபா ரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கரு வூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT