அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யா சாகர் ராவ் நேற்று மாலை பார்த் தார். முதல்வர் உடல்நிலை தேறி வருவதாக ஆளுநர் தெரிவித்துள் ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்து வமனை நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த 10 நாட்களாக முதல் வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. ‘முதல்வருக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டது. தேவையான மருத்துவ பரிசோத னைகள் நடந்து வருவதால் மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனை யில் இருக்க வேண்டியுள்ளது’ என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.
இதற்கிடையே, முதல்வரின் உடல்நிலை பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவிவந்தன. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், மும்பையில் இருந்து நேற்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் சிகிச்சை பெற்று வரும் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு நேற்று மாலை 6.45 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்றார். அங்கு முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி யிடம் கேட்டறிந்தார்.
முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு ஆளுநர் சென்றார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆளுநரிடம் மருத்துவர்கள் குழு விளக்கமாக எடுத்துரைத்தது. அதற்காக மருத்துவர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
முதல்வர் குணமடைந்து வருகி றார் என்பதை ஆளுநர் மகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டார். அப்போது முதல்வருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும் மருத்து வர்களை ஆளுநர் பாராட்டினார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த ஆளுநர், அவருக்கு பழங்களை வழங்கினார்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் ஓ.பன் னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகி யோர் ஆளுநரை வரவேற்றனர்.
இவ்வாறு ஆளுநர் மாளிகை அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 35 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த ஆளுநர், இரவு 7.15 மணிக்கு அங்கிருந்து புறப் பட்டுச் சென்றார். அவரை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
ஆளுநரின் வருகையையொட்டி மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.