தமிழகம்

அரசு பள்ளி வளாகத்தில் இருந்த செம்மரத்தை வெட்டி கடத்தியதாக 10 பேர் சிக்கினர்: போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இருந்த செம்மரத்தை வெட்டி கடத்தியது தொடர்பாக 10 பேர் போலீஸாரிடம் சிக்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அத்திமாஞ்சேரிபேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் செம்மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் பல ஆண்டுகளாக உள்ளன.

இந்நிலையில், இந்த அரசு பள்ளி வளாகத்தில் இருந்த செம்மரங்களில், சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 8 செம்மரங்களை கடந்த 2 ஆண்டுகளில் மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென் றுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 16-ம் தேதி காலை பள்ளி திறக் கப்பட்டபோது, பள்ளி வளாகத் தில் இருந்த, (65 ஆண்டுகள் பழமையான ஏற்கெனவே மர்ம நபர்களால் மேற்பகுதி வெட்டப் பட்டு விட்டு வைக்கப்பட்ட) சுமார் 6 அடி உயரமுள்ள செம்மரத்தின் அடிப் பகுதியை நள்ளிரவில் மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரத்தை வெட்டிக் கடத்தியவர்களை போலீஸார் மற்றும் வனத் துறையினர் தேடி வந்தனர்.

7 துண்டுகள்

இந்நிலையில், வெட்டிக் கடத்தப்பட்ட செம்மரம், 7 துண்டுகளாக ஆர்.கே.பேட்டை அருகே பாலாபுரம் பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது ஆர்.கே.பேட்டை போலீஸாருக்கு தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பள்ளிப்பட்டுவைச் சேர்ந்த சார்லஸ், திருத்தணியைச் சேர்ந்த சதீஷ்குமார், திருவண்ணா மலை, வேலூர், ஆர்.கே.பேட்டை பகுதிகளைச் சேர்ந்த கோவிந்தன், சாந்தகுமார், பாண்டுரங்கன், ராஜேஷ், நீலகண்டன், குமார் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT