தமிழகம்

ஆயுத பூஜைக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க் கெட் மலர் அங்காடி வளாகத்தில் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி வரை ஆயுத பூஜை சிறப்பு சந்தை நடைபெற உள்ளது. அதில் பூஜை பொருட்களான பொரி, கரும்பு, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், மாவிலை தோரணம், வாழைக் கன்று உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் வாகனங்களிடமிருந்து நுழைவுக் கட்டணம், பொருட்களை வியாபாரம் செய்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பணிக்கான ஏலம், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அது ரூ.6 லட்சத்து 39 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT