தமிழகம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 24 நாட்களில் உண்டியல் காணிக்கை ரூ.1.38 கோடி வசூல்

செய்திப்பிரிவு

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 24 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.38 கோடி ரொக்கம் வசூல் ஆனது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள்அனைவரும் மூலவர் முருகப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துவது வழக்கம்.

இந்த உண்டியல் பணம், மலைக் கோயிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர், கோயில் தக்கார் ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் கடந்த 24 நாட்களில் உண்டியல்கள் மூலம் ரூ.1.38 கோடி ரொக்கமும் 320 கிராம்தங்கமும் 11,480 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வசூல் ஆனதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT