தமிழகம்

மதுரையில் தபால் நிலையம் முற்றுகை: புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது

இரா.கோசிமின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை தலைமை தபால் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினர் மீனாட்சி பஜாரிலிருந்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் உட்பட 72 பேரை கைது செய்த போலீஸார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

          
SCROLL FOR NEXT