இன்னும் 4 மாதங்களில் தமிழக அரசியல் புதுவாழ்வு எடுக்கும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி யில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், துரைமுருகன் பேசியதாவது: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணம் பிடிபட்டதாகக் கூறி, தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. 234 தொகுதிகளிலும் பண விநியோகம் இருந்தது. இதனை கண்டுபிடிக்க முடியாத தேர்தல் ஆணையத்துக்கு அபரா தம் விதித்திருக்க வேண்டும்.
வேட்பாளர்களின் செலவை தேர்தல் ஆணையம்தான் ஏற்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தவறான போக்கினால்தான் இந்த தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தலிலாவது பண நடமாட்டம் இல்லாமல், தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
யார் ஒருவர் தனது தொகு தியை தெய்வமாக நினைக் கிறாரோ, அவரே வெற்றி பெறு வார். சூதாட்ட களமாகப் பயன் படுத்துபவர் அழிந்துவிடுவார். கே.சி.பழனிசாமி தனது தொகுதியை தெய்வமாக நினைப்பதையும் தாண்டித் தனது சொந்தச் செலவில் கோயிலே கட்டிக்கொடுக்கிறார். அதனால் அவர் வெற்றி பெறுவது உறுதி.
முதல்வர் இல்லாமல் இருக்க லாம். ஆனால் அரசாங்கம் நடக்கா மல் இருக்கக்கூடாது. இன்னும் 4 மாதங்களில் தமிழக அரசி யல் புதுவாழ்வு எடுக்கும். அப் போது, கே.சி.பழனிசாமி அமைச்சராக இருப்பார் என்றார்.