குரூப்-4 தேர்வுக்கு நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 6-ம் தேதி தொகுதி-IV ல் (குரூப்-4) அடங்கிய 5,451 காலிப் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன. சரியான முறையில் விவரங் களை பதிவு செய்து, உரிய தேர் வுக் கட்டணம் செலுத்திய விண் ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண் (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டுள்ளதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப் பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி யும் நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாத, தகுதியான விண்ணப்ப தாரர்கள், தாங்கள் பணம் செலுத் தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன் விவரங்களை contact tnpsc@gmail.com என்ற தேர் வாணையத்தின் மின்னஞ்சல் முக வரிக்கு 31-ம் தேதிக்குள் அனுப்பு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள். அதன்பிறகு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
இத்தகவல்களை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் தேர்வுக்கட்டுப் பாடு அலுவலர் வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.