தமிழகம்

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகளை அக்டோபருக்குள் முடிக்க வேண்டும்: பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை அக்டோபருக்குள் முடிக்க வேண்டும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், பொதுப்பணித் துறை சார்பில் சென்னை மண்டலத்தில் திட்டப்பணிகள், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளின் தற் போதைய நிலை குறித்து, பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்வழித்தடங்களில் கடந்தாண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட உடைப்புகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ள சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டன.

இதில் ரூ.3 கோடியே 62 லட்சத்தில் சென்னை மாவட்டத்தில் 21 பணிகள், திருவள்ளூரில் 18 பணிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் 10 பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓடும் அடையாறு நீர்வழித்தடத்தில் உள்ள தடைகள் மற்றும் மண்திட்டுகளை அகற்றி வெள்ளநீர் விரைவாக வழிந்தோட, 52 இடங்களில் ரூ.6 கோடியே 38 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் விரைவாக வழிந்தோடும் வகையில் கீழ் பரவனாறு- மத்திய பரவனாறு இணைப்புக் கால்வாய் புதிதாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர நெய்வேலி பழுப்பு நிலக்கரி மூலம் கடலூர் மாவட்டம் செங்கால் ஓடையை அகலப்படுத்தி தூர்வாரி கரைகள் சீரமைக்கும் பணிகளும் விரைவாக முடிக்கப்படும். மேலும், சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக புதிதாக அமைக்கப்படும் தேர்வாய் கண்டிகை கண்ணன் கோட்டை நீர்த்தேக்கப்பணிகளையும் விரை வாக முடிக்கவும், வெள்ள காலங்க ளில் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT