காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக எப்போதும் முட்டுக்கட்டையாக இருந்த தில்லை. உரிய சட்டத்தின் மூலம், வலிமையாக அமைக்க விரும்பு கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கோவையில் சசிகுமார் கொலை வழக்கில் வேண்டு மென்றே கைது நடவடிக்கையை காவல்துறை தாமப்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்து நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது தொடர் பாக மத்திய உள்துறை மூலம் கண்காணிக்க, பாஜக வலியுறுத்தி உள்ளது.
முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவது தவறு. அவதூறு குறித்த வழக்கில் உண்மைத் தன்மையை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். புதிதாக நிர்வாகப் பணிகளை எடுத் துள்ள ஓ.பன்னீர்செல்வம் சுணக்க மின்றி செயல்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக எப்போதும் முட்டுக்கட்டையாக இருந்த தில்லை. உரிய சட்டத்தின் மூலம், வலிமையாக அமைக்க விரும்பு கிறோம்.
காவிரி தொடர்பாக பேச, காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. காவிரி பிரச்சினையில், திமுகவும், காங்கிரஸும் அரசியல் செய்கின்றன. தண்ணீர் கிடைக்க அனைத்து வகையிலும், தமிழக பாஜக விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் என்றார்.